கடந்த வருடம் நடத்தப்பட்ட கொடூரமான உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர்களை நீதி விசாரனைக்கு உட்படுத்த வேண்டும். இருப்பினும் கைதுகள் சட்டபூர்வமானதாக அமைய வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியாவுக்கான இயக்குணர் மீனாக்சி கங்குளி தெரிவித்துள்ளார்.
நன்கு அறியப்பட்ட சிலர் முஸ்லிம் சமூகத்தில் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளமையும், அரசின் பக்க சார்பான நடவடிக்கைகளும், முஸ்லிம்களுக்கு எதிராக அதிகரிக்கும் வெறுப்புப் பேச்சுக்களும் பரந்து பட்ட அளவில் முஸ்லிம் சமூகம் குறித்த கரிசனைகளை உண்டாக்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிகாரிகள் உரிய நடைமுறைகளை பின்பற்றி சமீபத்தில் கைது செய்யப்பட்டவர்களை சட்டத்தரணிகள் சந்திப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்துள்ள மீனாக்சி கங்குளி,
இலங்கையில் அனைத்து மக்களும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளனர். இந்த வைரஸ் ஆபத்து அரசாங்கம் நாட்டில் இன உறவுகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை வழங்கியுள்ளது. பொது பாதுகாப்பை உறுதி செய்வதற்கு பாரபட்டமற்ற முறையில் அதிகாரிகள் செயல்படுகின்றனர் என்ற தோற்றம் உருவாகுவது மிகவும் முக்கியமானது எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியாவுக்கான இயக்குணர் மீனாக்சி கங்குளி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.