வெலிசர கடற்படை முகாம் தனிமைப் படுத்தலுக்கு உட்படுத்தப் பட்டுள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர் கட்டளை தலபதி இசுறு சூரிய பண்டார தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் கொரோனா தொற்றுக்குள்ளாகியதாக கண்டறியப்பட்ட இராணுவ வீரர் வெலிசர கடற்படை முகாமில் கடமையாற்றியவர் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கடற்படை ஊடக பேச்சாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த படை வீரருக்கு 3 விதங்களில் ஏதாவது ஒரு வகையில் கொரோனா தொற்றியிருக்கலாம்.
ஒன்று கடற்படை முகாமுக்கு உள்ளே தொற்றியிருக்கலாம். அல்லது அவர் வீடு செல்லும் வழியில் அவருக்கு கொரோனா தொற்றியிருக்கலாம். அல்லது அவர் வீட்டுக்கு சென்ற பின்னர் அவருக்கு கொரோனா தொற்றியிருக்க வாய்ப்புண்டு.
எந்த விதத்தில் கொரோனா தொற்றியுள்ளது என்பது பற்றி ஆராய்ந்து வருகின்றோம். அவருடன் தொடர்புகளை பேணியவர்களையும் அடையாளம் கண்டுள்ளோம்.
அவர் இருந்த இடத்தில் இருக்கும் 3 முகாம்களில் அவர் தங்கியிருந்த முகாம் தனிமைப்படுத்தப் பட்டுள்ளது.
குறித்த வீரர் சாதாரண மக்களுடன் தொடர்புபடும் வகையில் பணி செய்பவர் அல்ல அவர் முகாமுக்குள் பணியில் ஈடுபடுபவர் என்பதால் அவருக்கு கொரோனா தொற்றிய விதம் பற்றி ஆராய்ந்து வருகின்றோம்.