பொலன்னறுவையில் இன்று (22) அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றிய நபர் வெலிசர கடற்படை முகாமில் மின்சார தொழிநுட்ப பிரிவில் கடமையாற்றும் இராணுவ வீரர் என கடற்படை ஊடக பேச்சாளர் லெப்டினன்ட் கமான்டர் இசுறு சூரிய பண்டார தெரிவித்துள்ளார்.
குறித்த வீரர் கடந்த 17ம் திகதி விடுமுறைக்காக பொலன்னறுவ புலஸ்திகம பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுள்ளதாகவும் 20ம் திகதி அவருக்கு உடல் நிலை சரியில்லாத நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
இந்நிலையிலேயே குறித்த வீரருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை இன்று (22) நடத்தப்பட்ட பரிசோதனைகளில் தெரியவந்துள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
அவர் கடமையாற்றிய வெலிசர முகாமுக்குள் சுகாதார தூய்மை பணிகள் மேற்கொள்ளப் படுவதாகவும், குறித்த வீரருக்கு கொரோனா தொற்றிய முறை தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.