உரிய ஆவணங்கள் இன்றி குவைத்தில் வேலை செய்து வருபவர்கள் தமது நாட்டுக்கு செல்வதற்கு குவைத் அரசு விசேட அனுமதியை வழங்கியுள்ள நிலையில் இம்மாதம் 21ம் திகதியிலிருந்து 25ம் திகதி வரை இலங்கையர்களுக்குறிய கால அவகாசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கை செல்வதற்காக குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு இன்று (21) சென்ற இலங்கையர்களை அங்குள்ள தூதரகம் திருப்பி அனுப்பி விட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தூரகத்தின் செயல்பாட்டுக்கு எதிராக குவைத்திலுள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்னால் ஆர்பாட்டம் நடத்தப்பட்டுள்ளதுடன் அங்குள்ள இலங்கையர்கள் அழும் காட்சிகளும் குவைத்திலிருக்கும் எமது செய்தியாளர் மூலம் ShortNews க்கு கிடைத்துள்ளன.
வீடியோ...