கொழும்பு 12, பண்டாரநாயக்க மாவத்தையில் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ள சலூன் - முடிவெட்டும் நபர் தனக்கு கொரோனா தொற்றியிருந்த நிலையில் சுமார் 25 நபர்களுக்கு முடிவெட்டியுள்ளதினால் அப்பகுதியில் பலருக்கு கொரோனா தொற்றியிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
இது தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க சுகாதார மற்றும் பாதுகாப்பு தரப்பு தயாராகியுள்ளது.