கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையில் ஊரடங்கு சட்டத்தை மீறி மத போதகரின் இறுதி சடங்கில் ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்டுள்ளமை பெரும் வங்கதேசத்தில் பெரும் அதிர்சியை உண்டாக்கியுள்ளது.
பங்கலாதேஷில் கொரோனா தொற்றினால் 2,456 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 91 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் பங்களாதேஷின் இஸ்லாமிய அமைப்பின் தலைவரும் மத போதகருமான மவுலானா சுபைர் அஹ்மத் உடல் நலக் குறைவால் உயிரிழந்துள்ள நிலையில் ஜனாஸாவில் 5 பேருக்கு மேல் கலந்து கொள்ளக் கூடாது என அரசு அறிவித்தல் விடுத்திருந்த போதும் அரசின் அறவிப்பை மீறி அவருடைய ஜனாஸா நல்லடக்கத்தில் ஆயிரக் கணக்கானவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
சமூக இடைவெளி பேணுமாறு உலக நாடுகளும் உலக சுகாதார நிறுவனமும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இது போன்ற சம்பவங்கள் பெரும் சர்சைகளை ஏற்படுத்தி வருகின்றன.