கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் ஒன்றுக்கு மேற்பட்ட முறைகள் மனிதர்களை தாக்கலாம் என ஒக்ஸ்போட் பல்கலைக் கழகத்தின் தடுப்பூசி பற்றிய பேராசிரியர் சாரா கில்பேட் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் போதிய நிதி கிடைத்தால் செப்டம்பர் மாத இறுதிக்குள் தடுப்பூசி தயாரித்து விடலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை விட தடுப்பூசி மூலம் அதிக நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை தயாரிக்கும் குழுவின் தலைவராக செயல்படும் பேராசிரியர் சாரா கில்பேட் பி.பி.சி தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியிலேயே இதனை தெரிவித்துள்ளார்.