கொரோனா வைரஸ் தொற்றிய மேலும் இரண்டு பேர் பூரணமாக குணம் பெற்று வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இவர்களுடன் சேர்த்து இதுவரை 104 பேர் கொரோனாவிலிருந்து குணம் பெற்றுள்ளனர்.
இதுவரை 310 பேருக்கு இலங்கையில் கொரோனா தொற்று உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.
07 பேர் உயிரிழந்துள்ளதுடன் 199 பேர் இதுவரை சிகிச்சை பெற்று வருகின்றது.