இலங்கையில் கொரோனா பரவில் இத்தாலிக்கு ஒப்பாக இருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பேலியகொட மீன் விற்பனை நிலையத்தில் அடையாளம் காணப்பட்ட பிலியந்தலை மீன் வியாபாரி மூலம் கொழும்பில் பலருக்கு கொரோனா பரவ வாய்ப்புள்ளதாக மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் நிலையில்லாத வகையில் பரவி வருகின்றது. இதனை தடுப்பதற்கு எடுக்கப்படும் முன் ஆயத்த வேலைகளும் தோல்வியில் முடிந்து வருகின்றது.
உலகம் முழுவதும் கொரோனா தடுப்பு முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன.
நாளாந்தம் நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. ஆகவே நிலைமைகளை கட்டுப்படுத்துவதில் பல சவால்கள் உள்ளன.