நாளை சனிக்கிழமை (25.04.2020) நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கு அதிகமான மழை பெய்யும் என வானிலை அவதான நிலையம் கூறியுள்ளது.
இடைப்பருவப் பெயர்ச்சி காலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் மழை பெய்ய ஆரம்பித்துள்ளதாக வானிலை அவதான நிலைய அதிகாரி மொஹமட் சாலிஹின் தெரிவித்தார்.
மேலும் இது தொடர்பில் அவர் கூறுகையில்,
சப்ரகமுவ ,மேல், மத்திய ,வடமேல் , தென் ஆகிய மாகாணங்களிலும் , மன்னார், வவுனியா ,காலி , மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் நாளை 2 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யும்.
இந்நிலையில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி சப்பிரகமுவ , மத்திய , தென் , ஊவா ஆகிய மாகாணங்களின் சில பகுதிகளில் பதிவாகக்கூடும்.
புத்தளம், கொழும்பு, காலி, அம்பாந்தோட்டை , பொத்துவில் ஊடாக மட்டகளப்பு வரையிலான கடற்பகுதியில் பலத்த மழை பெய்யக்கூடும். அவ்வேளை காற்றின் வேகம் 70-80 கிலோ மீற்ற்ர் அதிக வேகத்தில் வீசக்கூடும்.