அமெரிக்க கப்பல்களுக்கு தொந்தரவு தரும் ஈரானிய கப்பல்களை தாக்குதல் நடத்தி அழிக்குமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
எங்கள் கப்பல்களுக்கு தொந்தரது தந்தால் ஈரானின் கப்பல்களை அழித்து விடுமாறு உத்தரவிட்டுள்ளதாக ட்ரம்ப் தனது ட்விட்டர் கணக்கில் தெரிவித்துள்ளார்.
ஈரான் தனது முதலாவது இராணுவ செய்மதியை வெற்றிகரமாக ஏவியுள்ளதாக இன்று அறிவித்துள்ள நிலையில் ட்ரம்ப் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.