முஸ்லிம்களின் புனிதத் தளங்களான மக்காவில் உள்ள கஃபா ஆலயம் மற்றும் மதீனாவில் உள்ள நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் பள்ளிவாயல் ஆகியவற்றில் ரமழான் நோன்பு நாட்களில் பள்ளியில் தங்கியிருந்து செய்யும் இஃதிகாப் எனும் வணக்கத்திற்கும் தடை விதித்துள்ளதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கத்தை தடுக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள முயற்சிகளில் ஒரு அங்கமாகவே இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக இரு புனிதத் தளங்களுக்கும் பொறுப்பான பொதுத் தலைவரும் பிரபல இமாமுமான அப்துர் ரஹ்மான் சுதைஸ் தெரிவித்து்ளளார்.