Our Feeds


Friday, April 24, 2020

www.shortnews.lk

மின் கட்டணம் தொடர்பில் அச்சப்பட தேவையில்லை

 

மின்சாரம் பயன்படுத்தப்படும் அலகுக்கு  மாத்திரமே மின் கட்டணம் கணக்கிடப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

 எந்தவிதமான மேலதிக கட்டணங்களோ அல்லது உதிரியான கட்டணங்களோ அறவிடப்படாது என்பதோடு, மின்கட்டணத்திற்கான சிவப்பு (Red Bill)அறிவித்தல் விடுக்கப்பட மாட்டாது எனவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

அத்துடன் அதிகமான மின்கட்டணத்தை செலுத்த வேண்டுமே என்ற அச்சம் பொது மக்களுக்கு தேவையில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.

எனினும் மின் கட்டணத்திற்கான பட்டியல் கிடைக்கப்பெற்றவுடன் விரைந்து செலுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »