அமெரிக்காவில் கொரோனாவினால் தற்போது ஏற்பட்டிருக்கும் பாதிப்பை விட அடுத்த கட்ட வைரஸ் பரவல் கடும் பாதிப்பை உண்டாக்கும் என அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்து வரவுள்ள குளிர் காலத்தில் இந்த வைரஸின் தாக்கம் நாம் நினைப்பதை விட கூடுதலாக இருக்கக் கூடும் என அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மைய இயக்குணர் அறிவித்துள்ளார்.
காய்சலும், கொரோனா தொற்றும் ஒரே நேரத்தில் நிகழும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
உலகில் அதிகமான கொரோனா மரணங்களை சந்தித்த நாடாக அமெரிக்காவே முன்னனியில் இருக்கின்றது.