இலங்கையில் இதுவரை கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் தொகை 304 ஆக உயர்ந்துள்ளது.
இன்று 20.04.2020 மாலை 07.00 மணி வரை மொத்தமாக 33 புதிய கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
33 பேரில் கடைசியாக கண்டறியப்பட்ட நோயாளி ஒரு மீன் வியாபாரி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 32 பேரும் கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்த இந்தியாவுக்கு யாத்திரை சென்று வந்த பெண்ணுடன் நெருங்கி பழகியவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரை கொரோனா தொற்றிய 199 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.
98 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை மூலம் குணம் பெற்று வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
இலங்கையில் இதுவரை 7 பேர் கொரோனா தொற்றின் மூலம் உயிரிழந்துள்ளனர்.