கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி தயாரிக்கும் பணி வேகமாக நடைபெற்று வருவதாகவும் செப்டம்பர் மாத இறுதிக்குள் அவை பயன்பாட்டுக்கு வரும் என்றும் ஒக்ஸ்போட் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
தற்போது தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் நாளை முதல் இங்கிலாந்தில் மனிதர்கள் மீது பரிசோதிக்கப்படவுள்ளதாக இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.
கொரோனாவுக்கு எதிரான எந்த மருந்துகளும் இதுவரை கண்டு பிடிக்கப்படாத நிலையில் ஒக்ஸ்போட் பல்கலைக் கழக விஞ்ஞானிகளின் இந்த முயற்சி வெற்றியடையும் பட்சத்தில் விரைவில் உலக மக்களுக்கு தடுப்பூசி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.