பாராளுமன்ற தேர்தல் ஜுன் மாதம் 20ம் திகதி என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாராளுமன்றத்தை கலைத்து வர்த்தமானி அறிவிப்பு வெளியிட்ட ஜனாதிபதி கோத்தாவின் செயல்பாட்டுக்கு எதிராக உயர் நீதி மன்றம் செல்வதற்கு சில தரப்புகள் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக ஜனாதிபதி கோத்தபாயவினால் அறிவிக்கப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை ரத்து செய்யக் கோரியே குறித்த தரப்பினர் நீதிமன்றம் செல்லவுள்ளதாக அறிய வருகின்றது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பிரபல சட்டத்தரணியும், முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் அவர்கள்,
விசேட வர்த்தமானி மூலம் பாராளுமன்றத்தை கலைத்த ஜனாதிபதியவர்கள் மீண்டும் 3 மாதங்களுக்குள் பாராளுமன்றத்தை கூட்டியிருக்க வேண்டும். அப்படி கூட்டப்படாத போது பாராளுமன்ற கலைப்பு வலுவற்றதாகி விடும். அது தொடர்பில் அறிவிக்கப்பட்ட வர்த்தமானி அறிவிப்பும் வலுவற்றதாகி பாராளுமன்ற கலைப்பே அரசியல் அமைப்புக்கு முரனாகி விடும்.
2018ம் ஆண்டு மைத்திரிபால சிரிசேனவுக்கு எதிராக நீதி மன்றம் சென்றதும் இந்த அடிப்படையில் தான். ஜுன் 2ம் திகதிக்கு பின்னர் பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பாராளுமன்றமாக இருக்காது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.