கொழும்பு, பேலியகொட மீன் சந்தை நாளை 22ம் திகதி முதல் 3 நாட்களுக்கு மூடப்படுவதாக மீன் வர்த்தகர் சங்கம் அறிவித்துள்ளது.
சந்தை வளாகத்திற்குள் கொரோனா பரவுவதை தடுக்கும் முயற்சியாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
கொரோனா தொற்றியுள்ளதாக நேற்று அடையாளம் காணப்பட்ட பிலியந்தலை மீன் வியாபாரி பேலியகொட மீன் சந்தைக்கு நேற்று வந்து சென்றதாக தெரிவிக்கப்பட்ட நிலையில்,
பேலியகொட மீன் சந்தையிலிருக்கும் 144 கடைகளில் உரிமையாளர்கள் மற்றும் பணியார்கள் நாளை கொரோனாவை கண்டறியும் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.