Our Feeds


Wednesday, April 22, 2020

www.shortnews.lk

சலூன்கள் – அழகுக் கலை நிலையங்களை (Beauty centers) ‎மறுஅறிவித்தல்வரை மூட அரசு உத்தரவு

 

இலங்கையிலுள்ள சலூன்கள் மற்றும் அழகுக் கலை நிலையங்களை ‎‎மறுஅறிவித்தல் வரை மூடுமாறு சுகாதார அமைச்சு ‎அறிவித்துள்ளது.‎

இன்று ‎இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சுகாதார அமைச்சின் ‎பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க  இந்த அறிவிப்பை ‎விடுத்துள்ளார்.‎



நாட்டின் சில பகுதிகளில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், ‎‎மக்கள் அதிகளவில் நடமாடுவது தொடர்பில் அதிக கவனம் செலுத்த ‎‎வேண்டியது அவசியம் என அவர் இதன்போது கூறியுள்ளார்.‎

இதுவரை தாம்  கொரோனா வைரஸை முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் ‎‎கொண்டு வரவில்லை என கூறியுள்ள அவர் , ‎பொதுமக்கள் தொடர்ந்தும் சமூக ‎இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் ‎எனவும் சிறந்த சுகாதார ‎நடைமுறைகளை பின்பற்றுமாறும் ‎கேட்டுக்கொண்டுள்ளார்.‎

அதுமட்டுமில்லாமல், நாடு பூராகவும் வைத்தியசாலைகளை அண்மித்துள்ள ‎‎சிறிய உணவகங்களை மறுஅறிவித்தல் விடுக்கப்படும் வரை மூடுமாறும் ‎‎அவர் கூறியுள்ளார்.‎

அத்துடன், அனைத்து விதமான உணவகங்களும் சுகாதார நடைமுறைகளை ‎‎பேணுவதுடன், சுத்தமான சேவையை வழங்குமாறும் அவர் உத்தரவு ‎‎பிறப்பித்துள்ளார்.‎

வாடிக்கையாளர்களுக்கு தமது உணவகங்களில் உணவு உட்கொள்வதற்கான ‎‎சந்தர்ப்பத்தை வழங்குவதை விடவும், அவர்களுக்கு உணவு எடுத்து ‎‎செல்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்குமாறு சுகாதார ‎‎பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »