BCG தடுப்பூசி மற்றும் கொரோனா வைரஸ் தாக்கம் ஆகியவற்றுக்கு இடையான தாக்கம் தொடர்பில் புதிய ஆய்வு முடிவுகள் கண்டறியப் பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
BCG தடுப்பூசியை பயன்படுத்தாத அமெரிக்கா, இத்தாலி, நெதர்லாந்து ஆகிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்த தடுப்பூசியை ஏற்றும் நாடுகளில் கொரோனா மரணங்கள் குறைவாக பதிவாகியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கொரோனாவினால் 17 ஆயிரம் பேருக்கு மேல் உயிரிழந்துள்ள இத்தாலியில் மரணித்த எவறுக்கும் ஒரு போதும் BCG ஏற்றப்பட வில்லை.
இதுவரை கொரோனாவினால் 63 மரணங்கள் வரை பதிவாகியுள்ள ஜப்பானில் கொரோனாவுக்கு எதிராக பெரிய நடவடிக்கைகள் எவுதும் எடுக்கப்படா விட்டாலும் அனைவருக்கும் BCG தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.
BCG தடுப்பூசியை இரண்டு கால கட்டங்களில் வழங்கிய ஜப்பானையும், ஈரானையும் ஆய்வாளர்கள் ஒப்பிட்டுள்ளார்கள்.
ஜப்பான் 1947ல் BCG தடுப்பூசி கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது ஆனால் ஈரான் 1984ம் ஆண்டு தான் BCG தடுப்பூசி கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது.
BCG தடுப்பூசி கொள்கையை ஆரம்பத்திலேயே அறிமுகம் செய்யாமல் காலம் தாமதித்து அறிமுகம் செய்த நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகமாக பதிவாகியுள்ளதாக குறித்த ஆய்வில் தெரிவித்துள்ளன.
இலங்கையில் BCG தடுப்பூசி ஏற்றும் திட்டம் 1949ம் ஆண்டிலேயே கொண்டு வரப்பட்டுள்ளது.
1960ம் ஆண்டு முதல் சிசுக்களுக்கு BCG தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இலங்கையில் அறுமுகமாகியுள்ளன.
SHORTNEWS செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக்கில் பெற்றுக் கொள்ள
https://www.facebook.com/shortnewsTV/
WhatsApp Group இல் இணைந்து கொள்ள
SHORTNEWS செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக்கில் பெற்றுக் கொள்ள
https://www.facebook.com/shortnewsTV/
WhatsApp Group இல் இணைந்து கொள்ள