கொழும்பு 12, பண்டாரநாயக்க மாவத்தையில் இதுவரை 65 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
அங்குள்ள அனைத்து ஒழுங்கைகளிலும் (Lanes) கொரோனா நோயாளிகள் அடையாளகம் காணப்பட்டுள்ளதாக பண்டாரநாயக்க மாவத்தை PHI அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
72 பேருக்கு இன்று (23) நடத்தப்பட்ட PCR பரிசோதனைகளை தொடர்ந்து 4 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் அப்பகுதியை சேர்ந்த சுப்பர் மார்க்கட் காசாளர் ஒருவரும் அடங்குகிறார்.
குறித்த பகுதியில் உள்ள கொரோனா தொற்றாளர்களை கண்டறியும் வகையில் இன்றும் அப்பகுதியை சேர்ந்த 100 பேருக்கு கொரோனா கண்டறியும் PCR பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
பண்டாரநாயக்க மாவத்தை பகுதியில் உள்ள 1,000 க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பு முகாம்களில் தங்கவைக்கப் பட்டுள்ளனர்.
AzzamAmeen