உலக அளவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 26,35,716 ஆக உயர்ந்துள்ளது.
உலக அளவில் கொரோனாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 1,84,066 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று மாத்திரம் உலகளவில் 79,956 புதிய கொரோனா நோயாளிகள் கண்டறியப் பட்டுள்ளனர்.
நேற்று ஒரே நாளில் உலக அளவில் 6,607 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலக அளவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 7,17,444 பேர் குணம் பெற்றுள்ளனர்.
இதே நேரத்தில் கொரோனா தொற்றியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் உலக அளவில் இதுவரை 17,34,206 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உலக அளவில் அதிகமாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டு வரும் அமெரிக்காவில் நேற்று மாத்திரம் 29,973 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 8,48,717 ஆக உயர்ந்துள்ளது.