சவுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,147 புதிய கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 05 பேர் உயிரிழந்துள்ளதுடன் சவுதியில் மொத்த கொரோனா உயிரிழப்பு 109 ஆக உயர்ந்துள்ளது.
சவுதியில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 11,631 ஆக உயர்ந்துள்ள அதே நேரம் இதுவரை 1,640 பேர் குணம் பெற்று வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
சவுதியில் மக்கா நகரிலேயே அதிக கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் இதுவரை 305 பேர் மக்காவில் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 299 பேர் மதீனாவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சவுதியில் எதிர்வரும் ஒரு வாரத்தில் 2 லட்சம் கொரோனா நோயாளிகள் தொகை அதிகரிக்கும் என சுகாதார துறை அமைச்சர் Dr தவ்பீக் அல்-ரபிஆ எச்சரிக்கை விடுத்துள்ளார்.