கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக இன்று (23) வெலிசர கடற்படை முகாமில் அடையாளம் காணப்பட்ட 29 கடற்படை வீரர்களுக்கும் கொரோனா தாக்கம் ஏற்பட்ட விதம் தொடர்பில் இராணுவ தளபதி விளக்கமளித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜா-எல, சுதுவெல்ல பிரதேசத்தில் போதைப் பொருள் பயன்படுத்தியதன் மூலம் கொரோனா தாக்கத்திற்கு உள்ளான நிலையில் தலை மறைவாகியிருந்தவர்களை தேடும் பணியில் ஈடுபட்ட போதே இவர்களுக்கு கொரோனா தொற்றியுள்ளதாக தெரியவந்துள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
வெலிசர கடற்படை முகாம் தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாகவும் இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.