25 கொரோனா தொற்றாளர்கள் பலத்த பாதுகாப்புடன் காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதி
மட்டக்களப்பு பல்கலைக்கழக கொரோனா தனிமைப்படுத்தும் தடுப்பு முகாமில் 25 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதை கண்டு பிடிக்கப்பட்ட தையடுத்து அவர்களை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் நேற்று திங்கட்கிழமை (20.04.2020) மாலை கொண்டு வரப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையாக அரச மருத்துவ சங்கம் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையை தீர்மானித்தது.
இதனடிப்படையில் இந்த வைத்தியசாலையை கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டதுடன் இதில் இயங்கி வந்த நோயாளர் பிரிவுகள் அனைத்தும் ஹிஸ்புல்லா கலாச்சார மண்டபம் மற்றும் வேறு அரச கட்டிடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதற்கு அந்த பிரதேச பொது அமைப்புக்கள் பெரும் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் மட்டக்களப்பு பல்கலைக்கழக தனிமைப்படுத்தும் நிலையத்தில் தனிமைப் படுத்தப்பட்டிருந்த 25 பேருக்கு கொரோனா தொற்று கண்டு பிடிக்கப்பட்டது. இதனையடுத்து குறித்த தொற்று நோயாளர்களை இராணுவ கவசவாகனம் பாதுகாப்புடன் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு நேற்றுமாலை கொண்டுவரப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.
Tuesday, April 21, 2020
25 கொரோனா தொற்றாளர்கள் பலத்த பாதுகாப்புடன் காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதி
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »