251 பங்களாதேஷ் வைத்தியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் தலைநகர் டாக்காவில் 200 பேர் பணிபுரிந்தவர்களாவர்.
கொரோனா தொற்றுக்குள்ளானோருக்கான சிகிச்சைகளை அளித்த வைத்தியர்களே இவ்வாறு தொற்றுக்குள்ளாகியுள்ளதாக பங்களாதேஷ் வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நோயாளிகளிடமிருந்து வைத்தியர்களுக்கு நோய்த்தொற்று பரவாமலிருப்பதற்கான தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களில் நிலவிய குறைபாடே இதற்கான காரணமெனவும் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
பங்களாதேஷில் இதுவரை 3772 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், 120 பேர் உயிரிழந்துள்ளனர்.
Friday, April 24, 2020
251 பங்களாதேஷ் வைத்தியர்களுக்கு கொரோனா
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »