குவைத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 85 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை மொத்தமாக 2,080 பேர் கொரோனா தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதுடன் 11 பேர் உயிரிழந்துள்ளதாக குவைத் சுகாதார துறை தெரிவித்துள்ளது.
59 வயதான பங்கலாதேசத்தை சேர்ந்த ஒருவரும் 63 வயதுடைய சோமாலியாவை சேர்ந்த ஒருவருமே இன்று உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.