உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களுடன் தொடர்புடையோருக்கு உதவியளித்தவர்கள் மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அனைவரையும் இந்த அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய வலியுறித்தியிருக்கிறார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இட்டிருக்கும் பதிவில் மேலும் கூறியிருப்பதாவது:
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடையோருக்கு உதவியளித்தவர்கள் மற்றும் பொறுப்புக்கூற வேண்டியவர்கலை இந்த அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் இடம்பெற்று ஒருவருடம் கடந்திருக்கும் நிலையில், அத்தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களுக்காகப் பிரார்த்திப்போம். அதில் காயமடைந்தவர்களுடனான எமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துவோம்.
நாமனைவரும் ஒரே நாட்டவர் என்ற வகையில் ஒருமித்து நின்று இலங்கையில் தீவிரவாதத்திற்கு ஒருபோதும் இடமில்லை என்பதைப் நிலைநாட்டுவோம். அத்தாக்குதல்களுடன் தொடர்புடையோருக்கு உதவியளித்தவர்கள், பொறுப்புக்கூற வேண்டிய அனைவரையும் இந்த அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.--
Tuesday, April 21, 2020
ஏப்ரில் 21 தாக்குதல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களை அரசு வெளிப்படுத்த வேண்டும்: கரு ஜயசூரிய
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »