பொலன்னறுவை லங்காபுற பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 12 கிராமங்கள் தனிமைப் படுத்தப் பட்டுள்ளதுடன், அங்கிருக்கும் 11 குடும்பங்களை சேர்ந்த 43 பேர் தனிமைப் படுத்தும் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று மாத்திரம் நாடு முழுவதும் 20 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
அவர்களில் 11 பேர் புனானை தனிமைப் படுத்தல் முகாமில் தனிமைப் படுத்தப் பட்டிருந்தவர்களாவர்.
07 பேர் கந்தக்காடு தனிமைப் படுத்தல் முகாமில் தனிமைப் படுத்தப் பட்டிருந்த பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்தவர்களாவர்.
மீதி இருவரில் ஒருவர் பொலன்னறுவையை சேர்ந்தவர் மற்றவர் ஜாஎல, சுதுவெல்ல பகுதியை சேர்ந்தவராவார்.
இலங்கையில் இதுவரை மொத்தமாக 334 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
105 பேர் குணம் பெற்று வைத்தியசாலையை விட்டும் வெளியேறியுள்ளதுடன் இதுவரை 07 பேர் உயிரிழந்துள்ளனர்.
222 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.