பாராளுமன்ற தேர்தல் ஜுன் 20ம் திகதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட போதும் அது மேலும் தாமதிக்கும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் செயலாளர் தயாசிரி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இன்று (21) தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கும் கட்சித் தலைவர்களுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது ஜூன் 20ம் திகதி தேர்தல் கண்டிப்பாக நடத்தப்படுமா என அழுத்தமாக கேட்க்கப்பட்ட நிலையில் அதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அதனை உறுதிப்படுத்த மறுத்துள்ளார்.
ஜுன் 20ம் திகதி தேர்தல் என்பது தற்காலிக சமாளிப்பு என்றே தான் கருதுவதாகவும் இம்மாதம் 27 முதல் 30ம் திகதிக்குள் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாகவும் அதன் போது உறுதியான திகதி தீர்மானிக்கப்படும் வாய்ப்புள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.