அமெரிக்காவில் கொரோனாவில் உயிரிழந்தோர் தொகை 42 ஆயிரத்தை கடந்துள்ளது.
உலகம் முழுவதும் இதுவரை 210 நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளது.
அமெரிக்காவில் இதுவரை 7 லட்சத்து 92 ஆயிரத்து 759 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது.
நேற்று ஒரே நாளில் 28 ஆயிரத்து 123 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
நேற்று ஒரே நாளில் 1,939 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவில் அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இதுவரை 42 ஆயிரத்து 514 பேராக உயர்ந்துள்ளது.