கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தையில் அதிகரித்து வருவதால் அங்குள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இதே வேலை அப்பகுதியில் இருக்கும் யாராவது வேறு பகுதிகளுக்கு தப்பிச் சென்றுள்ளனரா எனவும் படையினர் விசேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை மாவட்ட ரீதியில் வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை கண்டறியப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளின் பட்டியல் பிரகாரம் கொழும்பில் 110 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது.