இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடைந்தோரின் எண்ணிக்கை 109 ஆக உயர்வடைந்துள்ளது.
இன்று (24.04.2020) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய இருவர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இதுவரை 414 பேர் நோய்த் தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், தற்போது வைத்தியசாலையில் 298 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மேலும், நோய்த் தொற்று சந்தேகத்தில் 183 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைத்தியசாலையில் உள்ளார்கள். அதேவேளை கொரோனா தொற்றினால் இலங்கையில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
Friday, April 24, 2020
கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 109 ஆக அதிகரிப்பு
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »