இந்தியாவில் இருந்த 101 இலங்கை மாணவர்கள் இன்று (23) இலங்கை அழைத்து வரப்பட்டனர்.
இந்தியாவின், அம்ரிஸ்டார் நகரிலிருந்து ஸ்ரீ லங்கன் எயால்லைன்சுக்கு சொந்தமான விசேட விமானத்தில் தற்போது அவர்கள் இந்தியாவிலிருந்து இலங்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றனர்.
அவர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த பின்னர் அங்கிருந்து கொரோனா தடுப்பு முகாமுக்கு அழைத்து செல்லப்படவுள்ளனர்.
இவர்களை தொடர்ந்து ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமானத்தின் விசேட விமானம் ஒன்று நேபாளத்தில் உள்ள இலங்கை மாணவர்களை அழைத்து வருவதற்காக பயணிக்கவுள்ளது.