கொரோனா தொற்றியுள்ளதா என்பதை ஆராயும் PCR பரிசோதனைகளை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
அதனடிப்படையில் தனியார் வைத்தியசாலைகளுடன் சுகாதார அமைச்சு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
நாளுக்கு நாள் இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதினால் தனியார் வைத்தியசாலைகளையும் இணைத்துக் கொண்டு ஒரு நாளைக்கு ஆயிரம் பேருக்கு PCR பரிசோதனை நடத்துவதற்கு அரசு தீர்மானித்துள்ளது.