கடந்த வருடம் ஏப்ரல் 21ம் திகதி நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் முன்னால் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவை ஏன் கைது செய்ய வில்லை என்ற கேள்விக்கு முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில பதிலளித்துள்ளார்.
அரசமைப்பின் 35 (1) இன் பிரகாரம் மை்த்திரி தப்பித்துக் கொள்கின்றார்
அரசமைப்பின் 35 (1) இன் பிரகாரம் யாராவது ஜனாதிபதி பதவியை வகிக்கும் போது அவரது பதவி முறையிலோ அல்லது தனிப்பட்ட முறையிலோசெய்யப்பட்ட அல்லது செய்யாமல் விட்ட எந்த விடயம் தொடர்பிலும் ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் அல்லது குடியியல் வழக்கு தொடர்தல் அல்லது தொடர்ந்து நடத்துதல் ஆகியவை ஆகாது. என குறிப்பிடப்பட்டுள்ளதாக உதய கம்மன்பில தனது டுவிட்டர் கணக்கில் விளக்கியுள்ளார்.
இதே வேலை உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான எவ்வித விசாரனைகளும் முன்னால் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மீது இல்லையென கடந்த வாரம் பொலிஸ் உறுதி செய்துள்ளது.
எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் மைத்திரிபால சிரிசேன தாமரை மொட்டு சின்னத்தில் பொது ஜன பெரமுனவில் பொலன்னறுவை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.