கடந்த வருடம் ஏப்ரல் 21ம் திகதி நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலுடனோ அல்லது பயங்கரவாதத்துடனோ முன்னால் அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் மற்றும் முன்னால் ஆளுனர் ஹிஸ்புல்லாஹ், மற்றும் அஸாத் சாலி ஆகியோருக்கு தொடர்பில்லை என CID யினர் கடந்த வருடம் வழங்கிய அறிக்கை தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் பொலிஸ் விசேட விசாரனை பிரிவு - SIU விசாரனைகளை ஆரம்பித்துள்ளது.
பதில் பொலிஸ் மா அதிபர் ஷந்தன விக்கிரமரத்னவின் விசேட உத்தரவிலேயே இந்த விசாரனைகள் நடைபெற்று வருவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
ஏற்க்கனவே நடத்தப்பட்ட விசாரனைகளின் அடிப்படையில் CID வழங்கிய அறிக்கையுடன் இணைத்து குறித்த மூவருக்கும் பயங்கரவாத செயல்பாடுகளுக்கும் தொடர்பில்லை என பாராளுமன்ற செயலாளருக்கு பதில் பொலிஸ் மா அதிபர் ஷந்தன விக்கிரமரத்ன அறிவித்திருந்தார்.
இந்த பின்னனியில் அதே பதில் பொலிஸ் மா அதிபர் அவர்களினால் CID தனக்கு வழங்கிய குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்ட விதம், அதிலுள்ள விடயங்கள், விசாரனைகள் நடத்தப்பட்ட விதம் குறித்து விசாரனைகளை முன்னெடுக்கவே தற்போது பொலிஸ் விசேட விசாரனை பிரிவு - SIU க்கு உத்தரவிட்டுள்ளதாக அறிய முடிகின்றது.